search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் கலெக்டர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலெக்டர் காலை உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுமதி என்ற பெண் சமைப்பதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

    இந்த பெண் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று, ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம், சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர் புகார் அளித்தனர்.

    உடனே கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சென்றனர். அங்கு கலெக்டர் உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் காலை உணவு உண்ணாத, 15 குழந்தைகளின் பெற்றோரை விசாரணை செய்தார்.

    அருந்ததியர் சமூக பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு சாப்பிடாது, வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்று சான்றிதழ் பெற்றுக் கொள்கிறேன், என தெரிவித்தார்.

    இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த பாலசுப்பிரமணியன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

    இதை தொடர்ந்து, அவர் தன் குழந்தையை காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில், வழக்கு தொடுக்காமல் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். மேலும் காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    • 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்துடன் செஸ் விளையாடினார்

    கரூர்:

    மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு கட்டமாக அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்துடன் செஸ் விளையாடினார். மேலும், அலுவலர்கள் போட்டியில் பங்கேற்று விளையாடுவதை பார்வையிட்டார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர்கள் ம.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் சைபுதின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கரூர் கோட்டைமேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்டுள்ள செஸ் போட்டி விழிப்புணர்வு மற்றும் கரூர் அமராவதி புதிய பால த்தின் தென்கிழக்கு பகுதியில் வரையப்பட்டுள்ள செஸ் பலகை போன்ற கருப்பு, வெள்ளை கட் டங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×